No results found

  இசையாஸ் ஆகமம்

  அதிகாரம் 1

  1 யூதாவின் அரசர்களாகிய ஓசியாஸ், யோவாத்தான், ஆக்காஸ், எசேக்கியாஸ் ஆகியோரின் காலத்தில், யூதா, யெருசலேம் இவற்றைக் குறித்து, ஆமோஸ் என்பவரின் மகன் இசையாஸ் கண்ட காட்சி.

  2 வான்வெளியே கேள், வையகமே செவிசாய்@ ஏனெனில் ஆண்டவரே திருவாய் மலர்ந்தருளினார்: "பிள்ளைகளைப் பேணினோம், வளர்த்தோம்@ அவர்களே நம்மை எதிர்த்தார்கள்@

  3 எருது தன் உரிமையாளனை அறிந்து கொள்கிறது, கழுதை தன் தலைவனின் கொட்டகையைத் தெரிந்துகொள்கிறது@ ஆனால் இஸ்ராயேல் நம்மை அறிந்து கொள்ளவில்லை, நம் மக்களோ ஒன்றும் உணர்வதில்லை."

  4 இதுவோ பாவிகளான மக்களினம், அக்கிரமம் நிறைந்த மக்கள், தீமை செய்பவர்களின் சந்ததி, கெட்டுப்போயிருக்கும் மக்கள்@ ஏனெனில் தங்கள் ஆண்டவரைக் கைவிட்டனர். இஸ்ராயேலின் பரிசுத்தரை அவமதித்தனர், அவருக்கு அந்நியராய் ஆகிவிட்டனர்.

  5 உங்கள் உடலில் இன்னும் நாம் அடிக்க இடமேது? நீங்கள் அக்கிரமங்களை அடுக்கிக் கொண்டே போகிறீர்களே! தலையெல்லாம் நோயால் நிறைந்துள்ளது, இதயமெல்லாம் தளர்ச்சியுற்றுள்ளது.

  6 உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை உடலில் நலமே கிடையாது@ ஆனால் காயங்களும் கன்றிப்போன வீக்கமும் ஆறாப் புண்களுமே நிறைந்துள்ளன@ சீழ் பிதுக்கப்படவில்லை, கட்டுப் போடப்படவில்லை, எண்ணெய் விட்டுப் புண்ணை ஆற்றவுமில்லை.

  7 உங்கள் நாடு பாழாகியே கிடக்கிறது@ உங்கள் நகரங்கள் தீக்கிரையாயின@ அந்நியர் உங்கள் கண் முன்னாலேயே உங்களது நாட்டை விழுங்குகிறார்கள்@ அந்நியரால் வீழ்த்தப்பட்ட நாட்டைப் போல, உங்கள் நாடு பாழாகிக் கிடக்கின்றது.

  8 திராட்சைத் தோட்டத்துப் பந்தல் போலும், வெள்ளரித் தோட்டத்தின் குடிசை போலும், முற்றுகையிடப்பட்ட நகரம் போலும், சீயோன் மகள் கைவிடப் பட்டாள்.

  9 சேனைகளின் ஆண்டவர் நம்முள் சிலரேனும் எஞ்சியிருக்கும்படி விடாதிருந்தால், சோதோமைப் போல் நாம் ஆகியிருப்போம், கொமோராவுக்கு நாம் ஒத்திருப்போம்.

  10 சோதோமை ஆளுகிறவர்களே, ஆண்டவருடைய வாக்கைக் கேளுங்கள்@ கொமோரா நாட்டின் மக்களே, நம் கடவுளின் கட்டளைக்குச் செவிசாயுங்கள்.

  11 கணக்கற்ற உங்கள் பலிகள் நமக்கு எதற்காக என்கிறார் ஆண்டவர்@ ஆட்டுக் கடாக்களின் தகனப் பலிகளும், கொழுத்த மிருகங்களின் கொழுப்பும் நமக்குப் போதுமென்றாகி விட்டன@ காளைகளின் இரத்தத்திலும், ஆட்டுக்குட்டிகளின் குருதியிலும், வெள்ளாட்டுக் கடாக்களின் இரத்தத்திலும் நமக்கு விருப்பமில்லை@

  12 நீங்கள் நம் திருமுன் வரும் போது, நம் முற்றத்தை வலம் வந்து இவற்றைத் தரும்படி கேட்டவர் யார்?

  13 இனி மேல் பயனில்லாக் காணிக்கைகளைக் கொணர வேண்டாம், நீங்கள் காட்டும் தூபம் எனக்கு அருவருப்பையே தருகின்றது@ அமாவாசை, ஓய்வு நாள், வழிபாட்டுக் கூட்டங்கள் முதலிய அக்கிரமங்களையும் கொண்டாட்டத்தையும் சகிக்க மாட்டோம்.

  14 உங்கள் அமாவாசை, திருவிழாக் கொண்டாட்டங்களையும் முழு உள்ளத்தோடு நாம் வெறுத்துத் தள்ளுகிறோம்@ அவை நமக்கொரு சுமையாகி விட்டன@ அவற்றைச் சுமந்து சோர்ந்து போனோம்.

  15 நம்மை நோக்கி நீங்கள் கைகளை உயர்த்தும் போது, உங்களிடமிருந்து நம் முகத்தைத் திருப்பிக் கொள்கிறோம். நீங்கள் எவ்வளவு தான் மன்றாடினாலும் நாம் செவி சாய்ப்பதில்லை. உங்கள் கைகளோ இரத்தத்தில் தோய்ந்துள்ளன.

  16 உங்களைச் சுத்திகரியுங்கள், தூய்மைப்படுத்துங்கள். நம் கண் முன்னிருந்து உங்கள் தீச்செயலை அகற்றுங்கள்@ தீமை செய்வதை விட்டு ஓயுங்கள்@

  17 நன்மை செய்யக் கற்றுக் கொள்ளுங்கள்@ நீதியைத் தேடுங்கள், ஒடுக்கப்பட்டவனுக்கு உதவி செய்யுங்கள், திக்கற்ற பிள்ளைக்கு நீதி வழங்குங்கள், கைம்பெண்ணுக்காக வழக்கு நடத்துங்கள்.

  18 வாருங்கள், இப்பொழுது வழக்காடுவோம் என்கிறார் ஆண்டவர்@ உங்கள் பாவங்கள் செந்தூரம் போல் இருந்தாலும், உரைந்த பனி போல வெண்மையாகும்@ இரத்த நிறமாய் அவை சிவந்திருந்தாலும், பஞ்சைப் போல் அவை வெண்மையாகும்.

  19 மனமுவந்து நீங்கள் நமக்குக் கீழ்ப்படிந்தால், நாட்டில் விளையும் நற் கனிகளை உண்பீர்கள்@

  20 கீழ்ப்படிய மறுத்து நமக்குக் கோபத்தை மூட்டினால், திண்ணமாய் வாளுக்கு இரையாவீர்கள்@ ஏனெனில் ஆண்டவரே திருவாய் மலர்ந்தார்."

  21 பிரமாணிக்கமாய் இருந்த நகரம், நீதி நிறைந்திருந்த சீயோன், எப்படித் தான் வேசியாயினளோ! முன்னே, அந்நகரில் நீதி குடிகொண்டிருந்தது, இப்பொழுதோ கொலைகாரர் மலிந்துள்ளனர்.

  22 உன்னுடைய வெள்ளி களிம்பேறி விட்டது, உன் திராட்சை இரசமோ நீர்த்துப் போயிற்று.

  23 உன் தலைவர் பிரமாணிக்கமற்றவர்கள், திருடர்களுக்குத் தோழர்களாய் இருக்கிறார்கள்@ ஒவ்வொருவனும் கையூட்டு வாங்க ஏங்குகிறான்@ அன்பளிப்புகளைத் தேடி ஓடுகிறான்@ திக்கற்றவர்களுக்கு அவர்கள் நீதி வழங்குவதில்லை, கைம்பெண்களின் வழக்கைத் தீர்ப்பதுமில்லை.

  24 ஆதலால் சேனைகளின் ஆண்டவரும் இஸ்ராயேலின் வல்லவருமாகிய ஆண்டவர் கூறுகிறார்: "நம் பகைவர் மேல் ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்வோம், நம்முடைய எதிரிகளைப் பழிவாங்குவோம்@

  25 உனக்கெதிராய் உன் மேல் நம்முடைய கைகளை நீட்டுவோம், நன்றாகப் புடம் போட்டு உன் களிம்பை நீக்குவோம், உன்னிடமுள்ள கலவையுலோகத்தைப் போக்குவோம்.

  26 முன்னாளில் இருந்தது போல நீதிபதிகளை ஏற்படுத்துவோம், தொடக்கத்தில் இருந்தவாறு ஆலோசனைக்காரரைத் தருவோம். அதற்குப் பின் நீதியின் நகரமெனப் பெயர் பெறுவாய்@ பிரமாணிக்கமுள்ள பட்டணம் எனப்படுவாய்."

  27 சீயோன் நீதியினால் மீட்கப்படும், அங்கே மனந்திரும்புவோர் நியாயத்தால் மீட்படைவர்@

  28 ஆனால் கலகக்காரரும் பாவிகளும் ஒருங்கே ஒழிக்கப்படுவர்@ ஆண்டவரைப் புறக்கணித்தவர்கள் அனைவரும் அழிக்கப்படுவர்.

  29 நீங்கள் விரும்பிய தேவதாரு மரங்களை முன்னிட்டு நாணுவீர்கள், நீங்கள் உகந்ததாகக் கருதும் சோலைகளைக் குறித்து உங்கள் முகம் வெட்கத்தால் சிவந்து போகும்.

  30 ஏனெனில் இலையுதிர்ந்த தேவதாரு போலவும், நீரற்ற சோலை போலவும் ஆவீர்கள்.

  31 வலிமை மிக்கவன் சணற் கூளம் போலவும், அவனுடைய வேலைப்பாடு தீப்பொறி போலவும் ஆகும்@ அவை இரண்டும் ஒருங்கே எரிந்து போகும், அணைப்பவர் யாரும் இருக்கமாட்டார்கள்.

  Previous Next

  نموذج الاتصال