No results found

  உரோமருக்கு எழுதிய நிருபம்

  அதிகாரம் 1

  1 இறைமக்களாகும் படி அழைக்கப்பட்டு, கடவுளின் அன்பைப் பெற்றிருக்கிற உரோமைக் கிறிஸ்தவர்கள் அனைவருக்கும்,

  2 கிறிஸ்து இயேசுவின் ஊழியனும், அப்போஸ்தலனாக அழைக்கப் பெற்றவனுமாகிய சின்னப்பன் யான் எழுதுவது:

  3 நம் தந்தையாகிய கடவுளிடமிருந்தும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் சமாதானமும் உண்டாகுக.

  4 அப்போஸ்தலனாக அழைக்கப்பட்ட நான், கடவுளின் நற்செய்தியை அறிவிக்கக் குறிக்கப்பட்டிருக்கிறேன்.

  5 இந்நற்செய்தியை இறைவன் தம் வாக்குரைப்போர் வழியாய், பரிசுத்த நூல்களில் ஏற்கனவே வாக்களித்திருந்தார்.

  6 இந்நற்செய்தி அவருடைய மகனைப் பற்றியதாகும். இவர் மனிதன் என்ற முறையில் தாவீதின் வழிவந்தவர். பரிசுத்த ஆவியைப் பெற்ற நிலையில் இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்ததனால், கடவுளின் வல்லமை விளங்கும் இறைமகனாக ஏற்படுத்தப்பட்டார். இவரே நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து.

  7 புறவினத்தார் அனைவரும் கீழ்ப்படிந்து விசுவசிக்குமாறு, அப்போஸ்தலப் பணிபுரியும் திரு அருளை இவருடைய பெயரின் மகிமைக்காக இவர் வழியாகவே பெற்றுக்கொண்டோம். அந்தப் புறவினத்தாரைச் சார்ந்த நீங்களும் இறைவனின் அழைப்புப்பெற்று, இயேசு கிறிஸ்துவுக்கு உரியவர்களாய் இருக்கிறீர்கள்.

  8 முதலில் உங்கள் அனைவருக்காகவும் இயேசு கிறிஸ்துவின் வழியாய் என் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன். ஏனெனில், நீங்கள் விசுவாசத்தை ஏற்றுக்கொண்ட செய்தி உலக முழுவதிலும் பரவியிருக்கிறது.

  9 இடைவிடாது நான் உங்களை என் செபங்களில் எப்போதும் குறிப்பிட்டு வேண்டுகிறேன்.

  10 கடவுளின் திருவுளத்தால், உங்களிடம் வர இறுதியாய் இப்பொழுதாவது எனக்கு வாய்ப்புக் கிடைக்க வேண்டுமென மன்றாடுகிறேன். அவருடைய மகனைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்கும் பணியால் நான் ஆன்மீக முறையில் வழிபடும் கடவுளே, அவ்வாறு மன்றாடுகிறேன் என்பதற்குச் சாட்சி.

  11 நான் உங்களைக் காண ஏங்குகிறேன். அங்கே வந்து உங்களை உறுதிப்படுத்துவதற்கு ஆவிக்குரிய கொடை ஏதேனும் உங்களுக்கு வழங்கலாமென விழைகிறேன்.

  12 அதாவது, நான் உங்களிடையே தங்கி, உங்கள் விசுவாசத்தால் நானும், என் விசுவாசத்தால் நீங்களும் ஒருமிக்க ஊக்கமடைய வேண்டுமென்று விழைகிறேன்.

  13 மற்றப் புறவினத்தாரிடையில் நான் அடைந்த பலனை உங்களிடையிலும் அடைய விரும்பி உங்களிடம் வர நான் அடிக்கடி திட்டமிட்டதுண்டு. ஆயினும் இன்றுவரை இயலாமற்போயிற்று@ சகோதரர்களே, இதை நீங்கள் அறியவேண்டுமென விரும்புகிறேன்.

  14 கிரேக்கருக்கும் கிரேக்கல்லாதாருக்கும், அறிவுள்ளவர்களுக்கும் அறிவில்லாதவர்களுக்கும் நான் கடமைப்பட்டவன்.

  15 ஆதலால்தான் உரோமையில் இருக்கிற உங்களுக்கும் நற்செய்தி அறிவிக்க என் உள்ளம் ஆவல் கொண்டுள்ளது.

  16 நற்செய்தியைப் பற்றி நான் நாணமடைய மாட்டேன்@ ஏனெனில், அது மீட்பளிப்பதற்குக் கடவுளின் வல்லமையாய் உள்ளது. முதலில் யூதனுக்கும், அடுத்து கிரேக்கனுக்கும் விசுவாசிக்கும் ஒவ்வொருவனுக்குமே அது அங்ஙனம் உள்ளது.

  17 ஏனெனில், ~விசுவாசத்தினால் இறைவனுக்கு ஏற்புடையவனாக்கப் பட்டவனே வாழ்வு பெறுவான்~. என எழுதியுள்ளதன்றோ? இவ்வாறு ஏற்புடையவர்களாக்கும் இறையருட் செயல் முறை அந்த நற்செய்தியிலேயே வெளிப்படுகிறது. தொடக்கமுதல் இறுதிவரை அது விசுவாசத்தினாலேயே ஆகும்.

  18 இறைப்பற்று இல்லாத மனிதர்களின் ஒழுக்கக்கேட்டின் மீதெல்லாம் கடவுளின் சினம் விண்ணினின்று வெளிப்படுகிறது@ ஏனெனில், இவர்கள் தங்கள் ஒழுக்கக் கேட்டினால் உண்மையை ஒடுக்கிவிடுகின்றனர்.

  19 கடவுளைப்பற்றி அறியக்கூடியதெல்லாம் அவர்களுக்குத் தெளிவாய் விளங்கிற்று. அதைக் கடவுளே அவர்களுக்குக் காட்டித் தெளிவுறுத்தினார்.

  20 ஏனெனில், கட்புலனாகாத அவருடைய பண்புகளும், அவருடைய முடிவில்லா வல்லமையும், கடவுள் தன்மையும் உலகம் உண்டானது. முதல் அவருடைய படைப்புக்களிலேயே அறிவுக்குப் புலனாகின்றன. ஆகவே அவர்கள் சாக்குச் சொல்வதற்கு வழியில்லை.

  21 ஏனெனில், அவர்கள் கடவுளை அறிந்திருந்தும், கடவுளுக்கு உரிய மகிமையை அவருக்கு அளிக்கவுமில்லை@ நன்றி செலுத்தவுமில்லை. மாறாக, தங்கள் வீணான சிந்தனைகளில் அறிவிழந்தனர்.

  22 அவர்களுடைய உணர்வில்லா உள்ளம் இருண்டு போயிற்று. தங்களை ஞானிகள் எனப் பிதற்றும் அவர்கள் வெறும் மடையர் ஆயினர்.

  23 அழிவில்லாக் கடவுளின் மாட்சிமையை விடுத்து, அதற்குப் பதிலாக அழிந்து போகும் மனிதர், பறவைகள், விலங்குகள், ஊர்வன, ஆகியவற்றின் சாயலான உருவங்களை ஏற்று வழிபட்டனர்.

  24 ஆகவே, அவர்களுடைய உள்ளத்து இச்சைகளின்படி அவர்களைக் கடவுள் அசுத்தத்திற்குக் கையளித்து அவர்கள் ஒருவரோடொருவர் தங்கள் உடல்களை இழிவுபடுத்த விட்டு விட்டார்.

  25 ஏனெனில், அவர்கள் கடவுளின் உண்மையைப் பொய்யாக மாற்றினர்@ படைப்புப் பொருட்களுக்கு வழிபாடும் ஊழியமும் செய்தனர். படைத்தவரை மறந்தனர்@ அவரே என்றென்றும் போற்றுதற்குரியவர். ஆமென்.

  26 ஆதலால், கடவுள் அவர்களை வெட்கக் கேடான இச்சைகளுக்குக் கையளித்துவிட்டார்,. பெண்கள் இயல்பான மறையைவிட்டு, இயல்புக்கு மாறாக நடந்து கொண்டனர்.

  27 அவ்வாறே ஆண்களும் பெண்களோடு சேரும் இயல்பான முறையை விட்டு, ஒருவர் மீது ஒருவர் வேட்கை கொண்டு, காமத்தீயால் பற்றி எரிந்தனர்@ ஆண்கள் ஆண்களுடன் இழிவான செயல்களைச் செய்து தங்கள் ஒழுக்கக் கேட்டுக்கு ஏற்ற கூலியைத் தங்களிலேயே பெறுபவர் ஆயினர்.

  28 கடவுளை அறிந்து ஏற்பதன் தகைமையை அவர்கள் மறுத்தால் தகாதவற்றைச் செய்யும்படி அவர்களைக் கடவுள் அவர்களின் சீர்கெட்ட சிந்தைக்குக் கையளித்து விட்டார்.

  29 அவர்களோ, எல்லாவகையான அநியாயம், கெடுமதி, பேராசை, தீய மனம், நிறைந்தவர்கள் ஆயினர்@ அவர்கள் பொறாமை, கொலை, சண்டை, கபடம், வஞ்சகம் மிக்கவர்கள்@

  30 புறங்கூறுபவர்கள்@ அவதூறு பேசுபவர்கள், கடவுளை வெறுப்பவர்கள், மூர்க்கர்கள், இறுமாப்புடையவர்கள், வீண் பெருமை பாராட்டுபவர்கள், தீமை சூழ்வதில் திறமை வாய்ந்தவர்கள், பெற்றோருக்கு அடங்காதவர்கள், வாக்குத்தவறுபவர்கள்.

  31 அவர்களுக்கு அறிவு இல்லை, அன்புணர்ச்சி இல்லை. இரக்கம் இல்லை@

  32 இப்படியெல்லாம் நடப்பவர்கள் சாவுக்குரியவர்கள் என்னும் கடவுளுடைய நியமத்தை அறிந்திருந்தும் இவ்வாறு நடக்கின்றனர்@ தாங்கள் நடப்பது மட்டுமன்று, அப்படி நடப்பவர்களுக்குப் பாராட்டும் அளிக்கின்றனர்.
  Previous Next

  نموذج الاتصال