No results found

  யோபு ஆகமம்

  அதிகாரம் 1

   1 ஊஸ் என்னும் நாட்டில் யோபு என்பவர் ஒருவர் இருந்தார்@ அவர் மாசற்றவர்@ நேர்மையுள்ளவர். அவர் கடவுளுக்கு அஞ்சித் தீமையை விலக்கி நடந்து வந்தார்..

  2 அவருக்கு ஏழு புதல்வரும் மூன்று புதல்வியரும் இருந்தனர்.

  3 அவருக்கு ஏழாயிரம் ஆடுகளும் மூவாயிரம் ஒட்டகங்களும் ஐந்நூறு ஏர் மாடுகளும் ஐந்நூறு பெட்டைக் கழுதைகளும் இருந்தன. மேலும் அவரிடம் பல ஊழியர்களும் வேலை செய்து வந்தனர். கீழ்த்திசை நாடுகளின் அனைவருள்ளும் அவரே பெரியவராக இருந்தார்.

  4 அவருடைய புதல்வர்கள் ஒவ்வொருவரும் தத்தம் நாளில் தத்தம் வீட்டிலே விருந்து செய்வார்கள்@ அவ்விருந்தில் தங்களோடு உணணும்படி தங்கள் சகோதரிகள் மூவரையும் அழைப்பார்கள்.

  5 ஒவ்வொரு முறையும் விருந்து முடிந்த பிறகு, யோபு தம் மக்கள் ஒருவேளை ஏதேனும் பாவஞ் செய்து தங்கள் உள்ளத்தில் கடவுளைப் பழித்துரைத்திருக்கக் கூடும் என்று தமக்குள் சொல்லிக்கொண்டு, அவர்களை அழைப்பித்துப் பரிசுத்தப்படுத்தி விடியற்காலையில் எழுந்து அவர்கள் ஒவ்வொருவருக்காகவும் தகனப்பலிகளைச் செலுத்துவார். இவ்வாறே யோபு தம் வாழ்நாட்களில் செய்துவந்தார்.

  6 ஒரு நாள் வானவர்கள் ஆண்டவரின் முன்னிலையில் ஒன்று கூடியிருந்த போது, சாத்தானும் அவர்கள் நடுவிலே நின்றான்.

  7 ஆண்டவர் சாத்தானை நோக்கி, "எங்கிருந்து வருகிறாய்?" என்று கேட்டார். அவன், "உலகெங்கும் சுற்றி உலவி வந்தேன்" என்றான்.

  8 ஆண்டவர் சாத்தானைப் பார்த்து, " நம் ஊழியனாகிய யோபுவைக் கவனித்தாயா? அவனைப் போல் மாசற்றவனும் நேர்மையுள்ளவனும் கடவுளுக்கு அஞ்சித் தீமையை விலக்கி நடக்கிறவனும் வேறெவனும் இவ்வுலகில் இல்லை!" என்றார்.

  9 அதற்குச் சாத்தான் எதிர்வாதமாக ஆண்டவரிடம், "ஆதாயமில்லாமலா யோபு கடவுளுக்கு அஞ்சி நடக்கிறான்?

  10 அவனையும் அவன் வீட்டையும் அவன் உடைமைகள் அனைத்தையும் சுற்றி எப்பக்கமும் நீர் காவல் போடவில்லையோ? அவன் மேற்கொள்ளும் வினைகளை நீர் ஆசீர்வதிக்கவில்லையோ? அவன் உடைமைகளும் இந்நாட்டில் ஏராளமாக உள்ளனவே!

  11 ஆனால் உமது கையை ஓங்கி, அவன் உடைமைகளையெல்லாம் தொடும்@ அப்போது, அவன் உமது முகத்திற்கு எதிரிலேயே உம்மைப் பழிக்கிறானா இல்லையா என்று பாரும்" என்றான்.

  12 ஆண்டவர் சாத்தானைப் பார்த்து, "இதோ, அவன் உடைமைகள் எல்லாம் உன் கையில் இருக்கின்றன@ அவன் மேல் மட்டும் உன் கையை நீட்டாதே" என்றார். உடனே, சாத்தான் ஆண்டவரின் திருமுன் இருந்து புறப்பட்டான்.

  13 பிறகு, யோபுவின் புதல்வர் புதல்வியர் ஒரு நாள் தங்கள் மூத்த அண்ணன் வீட்டில் விருந்து அருந்திக் கொண்டிருந்தார்கள்.

  14 அப்போது தூதன் ஒருவன் யோபுவிடம் ஒடிவந்து, "ஐயா, எருதுகள் ஏர் உழுது கொண்டிருந்தன@ அவற்றின் அருகில் கழுதைகள் மேய்ந்து கொண்டிருந்தன.

  15 அவ்வேளையில் சபேயர் அவற்றின் மேல் பாய்ந்து எல்லாவற்றையும் ஓட்டிக் கொண்டு போனதுமல்லாமல், வேலைக்காரரையும் வாளால் கொன்று போட்டு விட்டார்கள்@ நான் ஒருவனே தப்பிப் பிழைத்து, இதை உமக்கு அறிவிக்க ஒடிவந்தேன்" என்றான்.

  16 இவன் சொல்லி வாய் முடூ முன் வேறொருவன் வந்து, "கடவுளின் நெருப்பு வானத்திலிருந்து விழுந்து ஆடுகளையும் வேலையாட்களையும் சுட்டெரித்து விட்டது@ நான் ஒருவனே தப்பிப் பிழைத்து இதை உமக்கு அறிவிக்க ஒடி வந்தேன்" என்றான்.

  17 இவன் இன்னும் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, இன்னொருவன் வந்து, "கல்தேயர் மூன்று கூட்டமாய் வந்து ஒட்டகங்களைக் கவர்ந்து ஓட்டிச் சென்று விட்டார்கள்@ வேலைக்காரர்களையும் வாளால் கொன்று போட்டார்கள்@ நான் ஒருவனே தப்பிப் பிழைத்து இதை உமக்கு அறிவிக்க ஓடி வந்தேன்" என்றான்.

  18 இவன் இன்னும் பேசிச் கொண்டிருக்கையிலேயே, மற்றொருவன் வந்து, "உம்முடைய புதல்வர் புதல்வியர் தங்கள் பெரிய அண்ணன் வீட்டில் விருந்து உண்டுகொண்டிருந்தார்கள்@

  19 அப்போது இதோ பாலைநிலத்திலிருந்து மாபெரும் சூறாவளி எழுந்து வந்து வீட்டின் நான்கு மூலைகளிலும் மோதவே, வீடு இடிந்து உம் பிள்ளைகள்மேல் விழுந்தது@ அவர்கள் அங்கேயே மாண்டு போயினர்@ நான் ஒருவனே தப்பிப் பிழைத்து இதை உமக்கு அறிவிக்க ஓடி வந்தேன்" என்றான்.

  20 அப்போது யோபு எழுந்திருந்து தம் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு, தலையையும் மழித்து விட்டுத் தரையில் விழுந்து தொழுது,

  21 நிருவாணியாய் என் தாய் வயிற்றிலிருந்து வெளிப்பட்டேன். நிருவாணியாகவே திரும்பிப் போவேன்@ ஆண்டவர் அளித்தார், ஆண்டவர் எடுத்துக்கொண்டார்@ ஆண்டவரின் திருப்பெயர் வாழ்த்தப்பெறுக!" என்றார்.

  22 இவற்றில் எல்லாம் யோபு பாவமேதும் செய்யவில்லை@ கடவுள் மேல் குறை கூறவுமில்லை.

  Previous Next

  نموذج الاتصال