No results found

  அருளப்பர் நற்செய்திகள்

  அதிகாரம் 1

  1 ஆதியிலே வார்த்தை இருந்தார்: அவ்வார்த்தை கடவுளோடு இருந்தார், அவ்வார்த்தை கடவுளாயும் இருந்தார்.

  2 அவர் ஆதியிலே கடவுளோடு இருந்தார்.

  3 அவர்வழியாகவே அனைத்தும் உண்டாயின@ உண்டானதெதுவும் அவராலேயன்றி உண்டாகவில்லை.

  4 அவருள் உயிர் இருந்தது@ அவ்வுயிரே மனிதருக்கு ஒளி.

  5 அவ்வொளி இருளில் ஒளிர்ந்தது@ இருளோ அதை மேற்கொள்ளவில்லை.

  6 கடவுள் அனுப்பிய ஒருவர் இருந்தார்@ அவர் பெயர் அருளப்பர்.

  7 அனைவரும் தம்வழியாக விசுவசிக்கும்படி, ஒளியைக்குறித்துச் சாட்சியம் அளிப்பதற்கு அவர் சாட்சியாக வந்தார்.

  8 அவர் ஒளியல்லர்@ ஒளியைக்குறித்துச் சாட்சியம் அளிக்க வந்தவரே.

  9 வார்த்தை உண்மையான ஒளி. ஒவ்வொருவனையும் ஒளிர்விக்கும் அவ்வொளி உலகிற்கு வந்துகொண்டிருந்தது.

  10 வார்த்தை உலகில் இருந்தார்@ அவர்வழியாகத்தான் உலகம் உண்டானது@ உலகமோ அவரை அறிந்துகொள்ளவில்லை.

  11 தமக்குரிய இடத்திற்கு வந்தார்@ அவருக்குரியவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.

  12 ஆனால், அவர் தமது பெயரிலே விசுவாசம் வைத்துத் தம்மை ஏற்றுக்கொண்ட அனைவருக்கும் கடவுளின் மக்களாகும் உரிமை அளித்தார்.

  13 இவர்கள் இரத்தத்தினாலோ உடல் ஆசையினாலோ ஆண்மகன் கொள்ளும் விருப்பத்தினாலோ பிறவாமல், கடவுளாலேயே பிறந்தவர்கள்.

  14 வார்த்தை மனுவுருவானார்@ நம்மிடையே குடிகொண்டார். அவரது மாட்சிமையை நாங்கள் கண்டோம். தந்தையிடமிருந்து அவர் பெற்ற இம்மாட்சிமை ஒரேபேறான அவருக்கு ஏற்ற மாட்சிமையே. ஆகவே அவர் அருளும் உண்மையும் நிறைந்து விளங்கினார்.

  15 அருளப்பர் அவரைக்குறித்துச் சான்றாக, "எனக்குப்பின் வருகிறவர் என்னிலும் முன்னிடம் பெற்றார்@ நான் சொன்னது இவரைப்பற்றியே ஏனெனில், எனக்குமுன்பு இருந்தார்." என உரக்கக் கூவினார்.

  16 அவருடைய நிறைவிலிருந்து நாம் அனைவரும் அருளுக்குமேல் அருளைப் பெற்றுள்ளோம்.

  17 ஏனெனில், திருச்சட்டம் மோயீசன்வழியாக அளிக்கப்பெற்றது@ ஆனால், அருளும் உண்மையும் இயேசு கிறிஸ்துவழியாக வந்தன.

  18 யாரும் கடவுளை என்றுமே கண்டதில்லை@ தந்தையின் அணைப்பிலுள்ள ஒரேபேறானவர்தாம் அவரை வெளிப்படுத்தினார்.

  19 யெருசலேமிலிருந்து யூதர்கள் குருக்களையும் லேவியரையும் அருளப்பரிடம் அனுப்பியபோது, அவர் கூறிய சான்றாவது: "நீர் யார் ?" என்று அவர்கள் கேட்க,

  20 அவர், "நான் மெசியா அல்லேன்" என்று ஒப்புக்கொண்டார்@ மறுக்காமல் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.

  21 "பின் என்ன ? நீர் எலியாசோ ?" என்று அவரைக் கேட்க, "நானல்லேன்" என்றார். "நீர் இறைவாக்கினரோ ?" என, "அல்லேன்" என்றார்.

  22 "எங்களை அனுப்பினவர்களுக்கு மறுமொழி அளிக்கவேண்டுமே@ உம்மைப்பற்றி என்ன சொல்லுகிறீர் ? நீர் யார் ?" என்று அவரை வினவினர்.

  23 "இறைவாக்கினரான இசையாஸ் கூறியபடி: ~ ஆண்டவருடைய வழியைச் செம்மைப்படுத்துங்கள் என்று பாலைவனத்தில் உண்டாகும் கூக்குரல் ~ நான்" என்றார்.

  24 அனுப்பப்பட்டவர் பரிசேயர்.

  25 அவர்கள், "நீர் மெசியாவோ எலியாசோ இறைவாக்கினரோ அல்லவென்றால், ஏன் ஞானஸ்நானம் கொடுக்கிறீர் ?" என்று அவரைக் கேட்டார்கள்.

  26 அதற்கு அருளப்பர், "நான் நீரால் ஞானஸ்நானம் கொடுக்கிறேன்@ நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார்.

  27 அவர் எனக்குப்பின் வருபவர். அவருடைய மிதியடி வாரை அவிழ்க்க நான் தகுதியற்றவன்" என்றார்.

  28 இது யோர்தானுக்கு அப்பாலுள்ள பெத்தானியாவில் நிகழ்ந்தது. அங்கே அருளப்பர் ஞானஸ்நானம் கொடுத்துவந்தார்.

  29 மறுநாள், இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட அருளப்பர், "இதோ! கடவுளுடைய செம்மறி@ இவரே உலகின் பாவங்களைப் போக்குபவர்.

  30 எனக்குப்பின் ஒருவர் வருகிறார், அவர் என்னிலும் முன்னிடம் பெற்றவர்@ என்று நான் சொன்னது இவரைப்பற்றியே: ஏனெனில், அவர் எனக்குமுன்பே இருந்தார்.

  31 நானும் இவரை அறியாதிருந்தேன். ஆயினும் இவர் இஸ்ராயேலுக்கு வெளிப்படும்பொருட்டே நான் நீரால் ஞானஸ்நானம் கொடுத்துவந்தேன்" என்றார்.

  32 மேலும், அருளப்பர் சாட்சியம் கூறியதாவது: "ஆவியானவர் புறாவைப்போல வானிலிருந்து இறங்கி, இவர்மேல் தங்கியதைக் கண்டேன்.

  33 நானும் இவரை அறியாதிருந்தேன். ஆனால், நீரால் ஞானஸ்நானம் கொடுக்கும்படி என்னை அனுப்பினவர், ~ஆவியானவர் இறங்கி யார்மேல் தங்குவதை நீ காண்பாயோ, அவரே பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் கொடுப்பவர்~ என்றார்.

  34 நான் கண்டேன். இவரே கடவுளின் மகன் என்று சாட்சியம் கூறுகின்றேன்."

  35 மறுநாள் மீண்டும் அருளப்பர் தம்முடைய சீடர் இருவரோடு இருக்கையில்,

  36 இயேசு அப்பக்கம் நடந்து சென்றார். அருளப்பர் அவரை உற்றுநோக்கி, "இதோ! கடவுளுடைய செம்மறி" என்றார்.

  37 சீடர் இருவரும் அவர் கூறியதைக் கேட்டு இயேசுவைப் பின்தொடர்ந்தனர்.

  38 இயேசு திரும்பிப் பார்த்து, அவர்கள் தம்மைப் பின்தொடர்வதைக் கண்டு, "என்ன வேண்டும் ?" என்று கேட்டார். அவர்கள், "ராபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர் ?" என்றனர். - ராபி என்றால் போதகர் என்று பொருள்படும். - "வந்து பாருங்கள்" என்றார்.

  39 அவர்கள் வந்து, அவர் தங்கியிருந்த இடத்தைக் கண்டு, அன்று அவரோடு தங்கினார்கள். அப்பொழுது பிற்பகல் ஏறக்குறைய நான்கு மணி.

  40 அருளப்பர் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின்தொடர்ந்த இருவருள் பெலவேந்திரர் ஒருவர். அவர் சீமோன் இராயப்பரின் சகோதரர்.

  41 அவர் முதலில் தம் சகோதரராகிய சீமோனைக் கண்டுபிடித்து, "மெசியாவைக் கண்டோம்" என்றார். - மெசியா என்பதற்கு ~ அபிஷேகம் செய்யப்பட்டவர் ~ என்பது பொருள்.

  42 - பின்பு அவரை இயேசுவிடம் அழைத்துவந்தார். இயேசு அவரை உற்றுநோக்கி, "நீ அருளப்பனின் மகனாகிய சீமோன், கேபா எனப்படுவாய்" என்றார். - கேபா என்பதற்கு இராயப்பர் என்பது பொருள்.

  43 மறுநாள், இயேசு கலிலேயாவுக்குச் செல்ல விரும்பினார். பிலிப்புவைக் கண்டு, "என்னைப் பின்செல்" என்றார்.

  44 பிலிப்பு பெத்சாயிதா ஊரினர். அதுவே பெலவேந்திரர், இராயப்பர் இவர்களுடைய ஊர்.

  45 பிலிப்பு நத்தனயேலைக் கண்டு, "இறைவாக்கினர்களும், திருச்சட்ட நூலிலே மோயீசனும் யாரைக்குறித்து எழுதினார்களோ அவரைக் கண்டோம். அவர் நாசரேத்தூர் சூசையின் மகன் இயேசு" என்றார்.

  46 அதற்கு நத்தனயேல், "நாசரேத்தூரிலிருந்து நல்லது எதுவும் வரக்கூடுமா ?" என்றார். பிலிப்புவோ, "வந்து பார்" என்றார்.

  47 நத்தனயேல் தம்மிடம் வருவதைக் கண்டு இயேசு அவரைப்பற்றி, "இதோ! உண்மையான இஸ்ராயேலன். இவன் கபடற்றவன்" என்றார்.

  48 நத்தனயேல் அவரிடம், "எவ்வாறு என்னை அறிந்தீர் ?" என்று கேட்க, இயேசு அவரைப் பார்த்து, "பிலிப்பு உன்னை அழைப்பதற்குமுன் நீ அத்திமரத்தின்கீழ் இருக்கையில் நான் உன்னைக் கண்டேன்" என்றார்.

  49 நத்தனயேல் அவரிடம், "ராபி, நீர் கடவுளின் மகன், நீரே இஸ்ராயேலின் அரசர்" என்று சொன்னார்.

  50 இயேசுவோ அவரை நோக்கி, "உன்னை அத்திமரத்தின்கீழ் கண்டேன் என்று நான் உனக்குச் சொன்னதாலா நீ விசுவசிக்கிறாய் ? இதிலும் பெரியவற்றைக் காண்பாய்" என்றுரைத்தார்.

  51 தொடர்ந்து, "வானம் திறந்திருப்பதையும், கடவுளுடைய தூதர்கள் மனுமகன்மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள் என்று உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்" என்றார்.

  Previous Next

  نموذج الاتصال